×

புரோ கபடி ஏலம்: பவன் ஷெராவத் ரூ.2.6 கோடிக்கு ஏலம்; ஈரான் வீரர் முகமதுரசா ரூ.2.35 கோடி

மும்பை: புரோ கபடி போட்டியின் 10வது சீசன் ஏலம் மும்பையில் நேற்றும், நேற்று முன்தினமும் நடந்தது. இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். முதல்முறையாக இங்கிலாந்து வீரர்களும் ஏலத்தில் பங்கேற்றனர். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக பவன் குமார் ஷெராவத்தை ரூ.2.65 கோடிக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணி வாங்கியது. இவரை இந்த ஆண்டு தமிழ் தலைவாஸ் அணி விடுவித்தது. மணீந்தர் சிங்கை ரூ.2.12 கோடிக்கு பெங்கால் வாரியர்ஸ் அணி மீண்டும் வாங்கி உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த சித்தார்த் தேசாயை இப்போது அரியானா ஸ்டீலர்ஸ் அணி ரூ.1 கோடிக்கு வாங்கியது.

ரைடர்களில் இந்த 3 பேர் மட்டும்தான் கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்டவர்கள். வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக ஈரான் வீரர் முகமதுரசாவை ரூ. 2.35 கோடிக்கு புனேரி பல்தான் ஏலம் எடுத்தது. அதிக விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்ட ஆல்ரவுண்டரும் இவர்தான். மற்றொரு ஈரான் வீரர் ஃபசல் அட்ராசலியை ரூ.1.60 கோடிக்கு குஜராத் ஜயன்ட் வசப்படுத்தியது. தற்காப்பு ஆட்டக்காரர்களில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் இவர்தான். இந்திய தற்காப்பு ஆட்டக்காரர் ராகுல் சேத்பால் ரூ.40.70 லட்சம், தமிழக வீரர் சந்திரன் ரஞ்சித் ரூ.62 லட்சத்துக்கு அரியானா ஸ்டீலர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டனர். பிரபஞ்சன், அஜித்குமார் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஏற்கனவே தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்கள்: மாசானமுத்து லட்சுமணன் (ரூ.31.60 லட்சம், தமிழ் தலைவாஸ்), பொன்பார்த்திபன் சுப்ரமணியன் (ரூ.19.20 லட்சம், பெங்களூர் புல்ஸ்), சதீஷ் கண்ணன் (ரூ.18.10 லட்சம், தமிழ் தலைவாஸ்), கே.செல்வமணி (ரூ.13லட்சம், தமிழ் தலைவாஸ்), சஜின் சந்திரசேகர் (பாட்னா பைரேட்ஸ்).

The post புரோ கபடி ஏலம்: பவன் ஷெராவத் ரூ.2.6 கோடிக்கு ஏலம்; ஈரான் வீரர் முகமதுரசா ரூ.2.35 கோடி appeared first on Dinakaran.

Tags : Pro Kabaddi ,Pawan Sherawat ,Mohammaduraza ,Mumbai ,India ,Iran ,Mohammadurasa ,Dinakaran ,
× RELATED புரோ கபடி 10வது சீசன் புதிய சாம்பியன் புனேரி பல்தான்